சுவைமிகு சுசியம்
தேவையானவை :
கடலைப்பருப்பு :500 கிராம்
வெல்லம் :100 கிராம்
ஏலம் :1 ஸ்பூன்
தேங்காய் :1/2மூடி
மைதா :500 கிராம்
செய்முறை :
கடலைப்பருப்பை 1 மணி
நேரம் ஊற வைத்துப் பின் குக்கரில் வேகவைத்து
எடுக்க வேண்டும். தட்டையான
கரண்டி கொண்டு நன்றாக மசித்து , அதில்
துருவிய தேங்காய், ஏலம் வறுத்து போட்டு கலந்து வைக்கவும்.பிறகு
பெரிய
நெல்லி அளவில் சிறிய உருண்டைகளாக
உருட்டி வைக்கவும்.
வெல்லத்தை நன்றாகத் தட்டி
அகண்ட வாணலியில் அளவான தண்ணீர் விட்டு
கம்பிப் பாகு பக்குவத்தில்
தயார் செய்யவும்.
பிறகு மைதா மாவை சிறிது
தண்ணீர் சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்து
வைக்கவும்.
சிறிய உருண்டைகளை மைதா
மாவில் ஒன்று ஒன்றாக முக்கி எடுத்து வாணலியில்
உள்ள எண்ணையில் போட்டு
பக்குவமாக சுட்டு எடுக்கவும்.
எல்லோரும் விரும்பும் சுவையான
சுசியம் தயார்.
,
No comments:
Post a Comment