Sunday, 4 June 2017

இரண்டு நிமிட அல்வா

                 இரண்டு நிமிட அல்வா

தேவையானவை:

கோதுமை மாவு      : ஒரு கப்
சர்க்கரை             : ஒரு கப்
நெய்                 : ½ கப்
தண்ணீர்              :1 ½ கப்
முந்திரிப்பருப்பு       : 10
ஏலக்காய் பொடி      : ¼ டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் 
சர்க்கரை, ஏலப்பொடி பொட்டு கொதிக்க விடவும். 
இன்னொரு அடுப்பில் ஒரு வாணலியில் முக்கால் 
பங்கு நெய், முந்திரி, கோதுமை மாவு போட்டு சிவக்க 
வறுக்கவும். இது வறுபடுவதற்கும், தண்ணீர்
சர்க்கரை கலந்தது கொதிப்பதற்கும் சரியாக இருக்கும். 
கொதித்த சர்ககரைத் தண்ணீரை வறுத்த மாவில் கொட்டவும். 
மீதி கால் பங்கு நெய்யை கொட்டி கலந்து இறக்கி வைக்கவும் 
2 நிமிடங்களில் சுவையான அல்வா தயார்.


கும்பகோணம் டிகிரி காப்பி

                  கும்பகோணம் டிகிரி காப்பி

தேவையான பொருட்கள்

பக்குவமாக வறுத்து அரைத்த
புதிய காப்பி பவுடர் (சிக்கிரி கலந்தது) – 3 மேசைக் கரண்டி
பால்                                - 1/1/2 கப்
சர்க்கரை                            - 11/2 தேக்கரண்டி
தண்ணீர்                            -  ½ கப்

செய்முறை:
தண்ணீரை குமிழிகள் வரும் வரை கொதிக்க விடவும். மூன்று மேசைக் கரண்டி காப்பி பவுடரை பில்டரில் போட்டு மெதுவாக அழுத்தவும். உடனடியாக வெந்நீரை அதில் ஊற்றி மூடவும். அரை மணி நேரத்திற்குப் பிறகு ஸ்ட்ராங்கான டிகாஷன் தயார்.

1/1/2 கப் பாலை தண்ணீர் சேர்க்காமல் கொதிக்க வைக்கவும். ½ கப் டிகாஷனை பித்தளை அல்லது சில்வர் தம்ளரில் விடவும். அதில் ¾ கப் பாலும் அளவுக்கு ஏற்ப சர்க்கரையும் சேர்த்து தம்ளரில் நுரை பொங்க ஊற்றி வைக்கவும். நறுமணத்துடன் டிகிரி காப்பி தயார்.     

Sunday, 26 February 2017

பட்டாணி புலாவ்

                      பட்டாணி புலாவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி             : 200 கிராம்
பட்டாணி (காய்கறி)       ; 150  கிராம்
கேரட்                      :  50 கிராம் 
பல்லாரி வெங்காயம்     :  2
இஞ்சி, பூண்டு             : சிறிதளவு
பச்சை மிளகாய்           :  4
ஏலம்,                      : 1 ஸ்பூன்
கிராம்பு                    : 1/2 ஸ்பூன்
பட்டை                     : சிறிது
நெய் ,வெண்ணை        : சிறிது அளவு
உப்பு                       : தேவைக்கு

செய்முறை:

வாணலியில் நெய், வெண்ணை 2  ஸ்பூன் விட்டு, ஏலம், கிராம்பு, பட்டை
போட்டு வறுத்து, அதில் பல்லாரி வெங்காயம் சிலைஸுகளாக வெட்டிப் 
போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் ஊற வைத்த பட்டாணி, 
கேரட்டைப் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும். 
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிப் போடவும்.

தேங்காய்ப் பாலில் ஊற வைத்த பாசுமதி அரிசியை குக்கரில் ஒன்றரை மடங்கு 
தண்ணீர் விட்டு வெந்ததும், அதை வாணலியில் போட்டு, உப்பும் இட்டு, நன்றாக
கிளறவும். தேங்காய்ப் பாலில் பாசுமதி அரிசி ஊறியிருப்பதால் சாதம் நிறம்
வெண்ணிறமாக இருக்கும்.

சுவையான பட்டாணி புலாவ் ரெடி.

துணை:  துவரம் பருப்பு தால்  -  செய்முறை:

துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு தேவையான தண்ணீருடன்
குக்கரில் வைக்கவும். 
வாணலியில் உள்ள எண்ணையில் 1/2 ஸ்பூன் சீரகம் போட்டு, சீரகம் 
பொரிந்தவுடன்  பல்லாரி, தக்காளி, ப.மிளகாய் சிறிதாக நறுக்கி போட்டு
வதக்கவும். வேக வைத்த துவரம் பருப்பை வாணலியில் இடவும்..
தால் ரெடி.


                      

  

கூட்டாஞ் சோறு

                    கூட்டாஞ் சோறு


தேவையானவை

அரிசி                 : 500 கிராம்
துவரம் பருப்பு          : 500 கிராம்
புளி                  : 20 கிராம்
காயம், மஞ்சள் தூள்,      (சிறிது அளவு)
உப்பு  
தேங்காய்              : சிறியது ஒன்று
நல்ல எண்ணை         : 100 கிராம்
காய்கறிகள்:

வழைக்காய்     -  ஒன்று
கத்திரிக்காய்     -  200 கிராம்
முருங்கக்காய்   -   இரண்டு
மாங்காய்       -   ஒன்று
உருளைக்கிழங்கு_  - 200 கிராம்
காரட்          -  200 கிராம்
அவரைக்காய்      -100  கிராம்
கொத்து அவரைக்காய்100 கிராம்
பீன்ஸ்            100  கிராம்
சின்ன வெங்காயம்   200 கிராம்

செய்முறை:

குக்கரில் அரை லிட்டர் தண்ணீரில் துவரம் பருப்பை,மஞ்சள் தூள், காயம் சேர்த்து
சிறிது நேரம் (பருப்பு கால் வாசி வெந்ததும்)வேக வைக்கவும். பின்பு அதில் களைந்து
வைத்த அரிசியை போட்டு 1 1/2 லிட்டர் சூடான வென்னீர் விடவும். அதில் நறுக்கி
வைத்த எல்லா காய்கறிகளையும் போடவும். 

பாதி மூடி தேங்காய் துருவி, அதில் ஒரு ஸ்பூன் சீரகம்,12 வரமிளகாய்,10 சின்ன வெங்காயம், 10 பூண்டு பல் சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து அரிசி, பருப்பு காய்கறிகள் 3/4 வாசி வெந்தவுடன்போடவும். கரைத்த புளித்தண்ணீரை விடவும். உப்பு தேவையான அளவு போடவும்.

அரிசி, பருப்பு, காய்கறிகள் பக்குவமாக வெந்தவுடன் அதில் ,வானலியில் 100 கிராம் நல்ல எண்ணையில் கடுகு, கறி வேப்பிலை 20 சின்ன வெங்காயம் தாளித்து/வதக்கிப் கூட்டாஞ் சோறில் போடவும்.

இதுதான் மேல் நாட்டினர் விரும்பி சாப்பிடும் வெஜிடபில் ரைஸ். நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்தது.  பதினெட்டாம் பெருக்கு அன்று ஆறு இருக்கும் இடம் தேடி நம்மவர்கள் இந்த கூட்டாஞ் சோறை எடுத்து சென்று மிகவும் விரும்பி  உண்பார்கள்.

பொருத்தமான தொடு வகைகள்:

1. அப்பளம்,  2, வடகம்,   3.எல்லா விதமான சிப்ஸ்.

4. வெங்காய தயிர் பச்சடி:( செய்முறை)

3 பல்லாரி வெங்காயம்,  மூன்று பச்சை மிளகாய் எடுத்து பொடியாக வெட்டவும். அதை 200 கிராம்   தயிரில் போடவும். கொத்து மல்லி இலை நன்றாகக் கழுவி, வெட்டிப் போடவும். சிறிது உப்பு இடவும்.





உளுந்தப் பருப்பு சோறு

                                   உளுந்தப் பருப்பு சோறு


தேவையானவை

அரிசி                  : 500 கிராம்
உளுந்தம் பருப்பு         : 200 கிராம்
(உடைத்தது)அல்லது
கருப்பு உளுந்து
தேங்காய்              :  1 மூடி
பூண்டு                 20 பல்
வெந்தயம்            : 1 ஸ்பூன்
உப்பு                 : சிறிது

செய்முறை:

உளுந்தம் பருப்பை  வாணலியில் சிறிது வறுத்து எடுக்கவும்.
களைந்து வைத்த அரிசியும், வறுத்த உளுந்தம் பருப்பையும், 1 ஸ்பூன்
வெந்தயம், 20 பல் பூண்டு சேர்த்து 2 லிட்டெர் தண்ணீரில் குக்கரில்
பக்குவமாக வேக வைக்கவும். தேவையான உப்பு இடவும்.

தேங்காய் துருவி சாதத்தின் மேல் இடவும்

சுவையான, மிகவும் சத்துள்ள உணவு தயார். எல்லோரும், குறிப்பாக இளம்,
வயதான பெண்கள் விரும்பும் உணவு.

உளுந்தம் பருப்பு: தொலி உள்ளது அல்லது தொலி நீக்கியது,
அவரவர் விருப்பம்.

பொருத்தமான துணை உணவு:

1. அப்பளம், 2 வெங்காய வடகம்,  3. எல்லா விதமான சிப்ஸ்.

4. எள்ளு துவையல்:  (செய்முறை)

  எள்ளு  : 50  கிராம்
  சிறிய மூடி தேங்காய் , வர மிளகாய் 5, சிறிது புளி, உப்பு (தேவை)
  மிக்சியில் இட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  எள்ளு சட்னி தயார்.

5. கத்திரிக்காய் கொத்சு:

  கத்திரிக்காய்  - 250 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம்
  மிளகாய் -5, புளி - நெல்லி அளவு, உப்பு(தேவை) காயம் - சிறிது

  கத்திரிக்காய் 4 ஸ்பூன் எண்ணயில் வதக்கி  மசித்து சிறிது தண்ணீரில் வேக வைக்கவும்.   அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், புளி, உப்பு  போட்டு, பிறகு கடுகு, கறிவேப்பிலை   இட்டு தாளித்து இடவும்.
 

வெஜிடபிள் பிரியாணி

                வெஜிடபிள் பிரியாணி


தேவையானவை

பாசுமதி அரிசி                        : 200 கிராம்
காரட்                                : 1௦௦  கிராம்  
பீன்ஸ்                               : 100   கிராம்
பச்சை பட்டாணி                      : 50 கிராம்  
காளி பிளோவேர்                     :  சிறிய பூ
இஞ்சி,பூண்டு                          : 100கிராம்
சிறிய வெங்காயம்                     : 50கிராம்
புதினா, கொத்து மல்லி                 :100கிராம்
பெரிய வெங்காயம்                     : 3 
பச்சை மிளகாய்                         : 6
தக்காளி                                : 2   
எலுமிச்சை பழம்                        : 1
உப்பு                                  : தேவையான அளவு
பட்டை, லவங்கம் ஏலக்காய்
பிரியாணி இலை, கடல் பாசி             சிறிதளவு
எண்ணை நெய்                          வதக்க தேவையான அளவு

செய்முறை;

பாசுமதி அரிசியை ஒரு முறை நன்றாகக் கழுவி 2 கப் தண்ணீரில்
ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயத்தை அரைத்து வைக்கவும்.
புதினா, மல்லி, மிளகாயை அரைத்து வைக்கவும்
பெரிய வெங்காயத்தை நீண்ட வாக்கில் நறுக்கவும்.
எல்லா காய்களையும் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணை பாதி, நெய் பாதி சேர்த்து மசாலாக்களை
வதக்கவும் . பின் பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் . பச்சை வாசனை போனபின்பு
எல்லா காய்களை சேர்த்து வதக்கவும்.அதில் அரைத்த புதினா, மல்லி மசாலாவை
சேர்த்து வதக்கவும் .

காஸ் அடுப்பை சிம்மில் வைத்து ,  வதக்கினவற்றை மூடி வைக்கவும் ,
காய்கள்  பாதி வெந்தவுடன்  தேவையான உப்பு சேர்த்து கிளறி ஊற வைத்த 
அரிசியை தண்ணீரை வடித்து  அதில் சேர்த்து வதக்கவும்.
5   நிமிடங்கள் கழித்து வடித்த 2 கப் தண்ணீரை  சேர்த்து மூடி வைக்கவும்.

ஒரு கொதி  வந்தவுடன் அதில் எலுமிச்சை பழம் பிழிந்து மூடி வைத்து
ஒரு விசில் வந்தவுடன்  5 நிமிடம்  சிம்மில் வைத்து அணைக்கவும் .
 .
மிகவும் சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.

துணை: 1. வெங்காய தயிர் பச்சடி -  பல்லரி வெங்காயத்தை சிறிய துண்டுகளாக
வெட்டி, தயிரில் இடவும். அதில் பச்சை மிளகாய், கொத்து மல்லி இலை அரிந்து
இடவும். சிறிது உப்பு இடவும்.

2. உருளைக்கிழங்கு சிப்ஸ்., அப்பளம்

  

ஜீரா ரைஸ்

            ஜீரா ரைஸ்

தேவையானவை

பாசுமதி அரிசி             : 200 கிராம்
ஜீரகம்                    : 1/1/2 ஸ்பூன்
நெய்                     : 1 ஸ்பூன்
கிராம்பு, ஏலம், பட்டை,எள்     : சிறிதளவு
உப்பு, எண்ணை             : தேவையான அளவு


செய்முறை:

பாசுமதி அரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணை விட்டு ஜீரகம், கிராம்பு, ஏலம், பட்டை
போட்டு வறுக்கவும். நன்றாகப் பொரிந்து வந்தவுடன் , ஊற வைத்த
அரிசியில் வறுத்தவற்றைப்  போட்டு, 2 கிளாஸ் தண்ணீர் விட்டு 
குக்கரில் வைத்து 4 அல்லது 5 விசில் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

சுவையான ஜீரா ரைஸ் ரெடி.


துணை : சன்னா தால் 

வெஜிடபிள் புலாவ்

             வெஜிடபிள் புலாவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி             : 200 கிராம்
காரட்                     : 100 கிராம்
பீன்ஸ்                    : 100 கிராம்
பட்டாணி (காய்கறி)        ; 50  கிராம்
பல்லாரி வெங்காயம்        : 2
பச்சை மிளகாய்             : 4
ஏலம்,                      : 1 ஸ்பூன்
கிராம்பு                    : 1/2 ஸ்பூன்
பட்டை                    : சிறிது
நெய் , எண்ணை           : சிறிது அளவு
உப்பு                       : தேவைக்கு

செய்முறை:

வாணலியில் நெய், எண்ணை 2 பூன் விட்டு, ஏலம், கிராம்பு, பட்டை
போட்டு வறுத்து, அதில் பல்லாரி வெங்காயம் சிலைஸுகளாக
வெட்டிப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் காரட்,
பீன்ஸ், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிப் போடவும்.

ஊற வைத்த பாசுமதி அரிசியை குக்கரில் வைத்துப் பாதி
வெந்ததும், அதை வாணலியில் போட்டு, உப்பும் இட்டு, நன்றாக
கிளறவும்.

வெஜ். புலாவ் ரெடி.

துணை:  துவரம் பருப்பு தால்  -  செய்முறை:

துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு தேவையான தண்ணீருடன்
குக்கரில் வைக்கவும்.
வாணலியில் உள்ள எண்ணையில் 1/2 ஸ்பூன் சீரகம் போட்டு, சீரகம்
பொரிந்தவுடன்  பல்லாரி, தக்காளி, ப.மிளகாய் சிறிதாக நறுக்கி போட்டு
வதக்கவும். வேக வைத்த துவரம் பருப்பை வாணலியில் இடவும்..
தால் ரெடி.



  

பிஸிபேளா பாத்

             பிஸிபேளா பாத்

தேவையானவை

பச்சரிசி                : 200 கிராம்
துவரம் பருப்பு           : 100 கிராம்
சின்ன வெங்காயம்       :150 கிராம்
காரட்                 :100 கிராம்
பீன்ஸ்                 :100 கிராம்
பச்சைப் பட்டாணி        :50 கிராம்
புளி                   : 50 கிராம்
தக்காளி                : 3
தேங்காய்              : 1/2 மூடி
வர மிளகாய்           : 10
நெய்                  : 50 கிராம்
முந்த்ரிப்பருப்பு          : 25 கிராம்
ஏலம்                 : 1/2/ ஸ்பூன்
பட்டை, கிராம்பு         : சிறிது

செய்முறை:

அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு நன்றாகக்
குழைவாக வேக வைக்க வேண்டும்.

சின்ன வெங்காயம், ஏலம், தேங்காயை மிக்சியில் இட்டு நன்றாக
அரைக்க வேண்டும். புளியைக் கரைத்து, தக்காளியை சிறிய
துண்டுகளாக நறுக்க வேண்டும்.

வாணலியில் எண்ணை விட்டு, அதில் கடுகு போட்டு தாளித்து, அதில்
புளி, தக்காளியையும் போடவும். சிறிதாக நறுக்கி வைத்த காரட், பீன்ஸ்,
பட்டாணியைப் போடவும். உப்பு, மஞ்சள் தூள் போடவும், நன்றாக 
வெந்தவுடன், அதில் வேக வைத்த அரிசி, துவரம் பருப்பை இடவும்.
அதில் மிக்சியில் அரைத்ததை போடவும். தேவைக்கு தண்ணீர் விடவும்.
கொதித்து வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

தனியாக வாணலியில் நெய் விட்டு முத்ரிப்பருப்பு வறுத்து, இடவும்.
கொத்து மல்லி இலை இடவும்.

சுவையான் பிஸி பேளா பாத் ரெடி.

சைட் டிஷ்:

1. வாழைக்காய் சிப்ஸ்

2. ரைத்தா:   வெள்ளரிக்காய் சிறிய துண்டுகளாக வெட்டி, தயிரில் போட்டு
  சிறிது உப்பு, கொத்து மல்லி இலை இடவும்.   
 
 


எலுமிச்சை சாதம்

                  எலுமிச்சை சாதம்

தேவையானவை:

பச்சரிசி            :200 கிராம்
எலுமிச்சம் பழம்     : 2
இஞ்சி             : சிறிதளவு
பச்சை மிளகாய்     : 3
காயம்            : ஒரு சிட்டிகை

செய்முறை:

பச்சரிசியை குக்கரில் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாய், காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து
வைக்கவும். வாணலியில் எண்ணை சூடானதும் கடுகு, உளுந்தம்
பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளித்து, அதில் மிக்சியில்
அரைத்ததைப் போட்டு, அதில் தேவையான உப்பு, மஞ்சள்
பொடி போட்டு நன்றாக கிளறவும். பிறகு சாதத்தை சிறிது ஆறியதும்
வாணலியில் போட்டு நன்றாகக் கிளறவும்.

சுவையான எலுமிச்சை சாதம் தயார்.


துணை: அப்பளம்,வத்தல், சிப்ஸ்    

துவரம் பருப்பு சாதம்

                       துவரம் பருப்பு சாதம்

தேவையானவை:

புழுங்கள் அரிசி         - 200 கிராம்
துவரம் பருப்பு          - 100 கிராம்
புளி                  - எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல்      - 1/2 கப்
வர மிளகாய்           - 10
ஜீரகம்                - 1 ஸ்பூன்
பூண்டு                - 7 பல்
கறி வேப்பிலை         - சிறிது


செய்முறை:

அரிசி, துவரம் பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, குக்கரில் வேக
வைக்கவும்.

தேங்காய் துருவல், புளி, பூண்டு, வர மிளகாய், ஜீரகம் எல்லாம் மிக்சியில்
போட்டு நன்றாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு கடுகு, உ.பருப்பு, கறி வேப்பிலை போட்டு
தாளிக்கவும். அதில் மிக்சியில் அரைத்தைப் போட்டு கிளறவும். பிறகு அதில்
வேக வைத்த அரிசி, துவரம் பருப்பைப் போட்டு கிண்டவும்.


சுவையான துவரம் பருப்பு சாதம் ரெடி.