Monday, 20 February 2017

தட்டை

                      தட்டை


தேவையானவை:

புழுங்கல் அரிசி                : 400 கிராம்
உழுந்த மாவு                 :  100 கிராம்
வர மிளகாய்                  :  15
காயம்                        :  1/2 ஸ்பூன்
எள்                          :  2 ஸ்பூன்
உப்பு, எண்ணை               : தேவைக்கு
கறிவேப்பிலை                : சிறிது


செய்முறை:

அரிசி 2 மணி நேரம் ஊற வைத்து மிகவும் மையாக, மிளகாய், உப்பு, காயம்
சேர்த்து கிரைண்டெரில் அரைத்து வைக்கவும்.  அதில் எள், கறிவேப்பிலை,
2 ஸ்பூன் ஊற வைத்த கடலைபருப்பு சேர்த்து, வெண்ணை போட்டு நன்றாகப்
பிசையவும்.

தட்டை மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணை தடவிய வாழை இலையில்
தட்டி, வாணலியில் உள்ள எண்ணையில் போட்டு பொன்னிறத்தில் சுட்டு எடுக்கவும்.

சுவையான தட்டை தயார்.
 


No comments:

Post a Comment