பருப்பு போளி
தேவையானவை:
மைதா மாவு : 500 கிராம்
கடலைப்பருப்பு : 250 கிராம்
வெல்லம் :
400 கிராம்
ஏலம் : 2 ஸ்பூன்
தேங்காய் : 1/2 மூடி
செய்முறை;
மைதாமாவில் துளி உப்பு,
துளி மஞ்சள் தூள் 100 மில்லி தண்ணீர்+ 100 மில்லி எண்ணை கலந்து, அதை விட்டு நன்றாகப்
பிசைந்து இரண்டு மணி அளவு வைக்கவும்.
கடலைப்பருப்பை அரை வேக்காடு
வேக வைத்து அதில், துருவிய தேங்காய், ஏலம், பொடி செய்த வெல்லம் போட்டு மிக்சியில் அரைக்கவும்.
அதைப் பிறகு வாணலியில் 4 ஸ்பூன் நெய் விட்டு
கிண்டவும். கட்டியானவுடன் கொலி அளவு சிறிய உருண்டைகளாக செய்யவும்.(பூரணம்)
மைதா மாவை பூரி போல இட்டு
பூரணத்தை நடுவில் வைத்து உருட்டி மீண்டும் பூரி போல நெய் தடவிய இலையில் போட்டு, தோசைக்கல்லில்
பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
சுவையான பருப்பு போளி தயார்.
No comments:
Post a Comment