தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்
தேவையானவை
வெள்ளைப் பட்டாணி
: 250 கிராம்
தேங்காய் அரை மூடி
மாங்காய் பாதி அளவு
காரட் 1௦௦ கிராம்
பச்சை மிளகாய் 7
கொத்து மல்லி இலை :20 கிராம்
கடலை மாவு 2
ஸ்பூன்
இஞ்சி: சிறிது
கடுகு,
எண்ணெய்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முன்தினம் இரவு பட்டாணியை
ஊற வைக்கவும். மறுநாள் காலையில்
குக்கரில் நன்றாக வேக வைக்கவும்
. தேங்காய், காரட் துருவவும் .
பச்சை .மிளகாய், மல்லி
இலை சிறிதாக அரிந்து, மாங்காயைப் பொடியாக
நறுக்கவும் .
வாணலியில் எண்ணெய் விட்டு
கடுகு வெடித்தவுடன் , மாங்காய்,காரட்,
பச்சை மிளகாய் இட்டு நன்றாக
வதக்கவும். பிறகு அவித்த பட்டாணியை இட்டு
தேவையான உப்பு இட்டு கிண்டவும்.
கடலை மாவு இரண்டு ஸ்பூன் தூவ
வேண்டும் . பிறகு துருவிய தேங்காய்,மல்லி இலை போடவும்.
இப்போது மிகவும் சுவையான சுண்டல் ரெடி .
இந்த சுண்டலை சாதத்திற்கும்
மற்றும் பூரி, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட
நன்றாக
இருக்கும். தனியாக மாலை டிபனாகவும் சாப்பிடலாம்
No comments:
Post a Comment