பால் பாயாசம்
தேவையானவை:
தரமுள்ள பால் : 1 லிட்டெர்
பாசுமதி அல்லது
பச்சரிசி : 150 கிராம்
சர்க்கரை : 300 கிராம்
முந்த்ரிப்பருப்பு : 50 கிராம்
கிஸ்மிஸ் பழம் : 20 கிராம்
ஏலம் : 1 ஸ்பூன்
குங்குமப்பூ : 1 சிட்டிகை
செய்முறை:
குக்கரில் பாலை விட்டு
நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
அரிசியை 10 நிமிடங்கள்
ஊற வைத்து, குக்கரில் அரிசியைப்போட்டு
அடுப்பை சிம்மில் வைத்து
மெதுவாகக் கிண்டவும். சுமார் 20 நிமிடங்கள்
கழித்து, சர்க்கரை, பொடித்த
ஏலம் இரண்டையும் போடவும். பாயாசம்
தயார்.
முந்த்ரிப்பருப்பை 4 ஸ்பூன்
நெய்யில் வறுத்து பாயாசத்தில் போடவும்.
குங்குமப்பூவையும் இடவும்.
எல்லோரும் விரும்பும் சுவை
மிகுந்த பால் பாயாசம் தயார்.
No comments:
Post a Comment