Monday, 20 February 2017

உருளைக் கிழங்கு போண்டா

                   உருளைக் கிழங்கு போண்டா

தேவையானவை:

கடலை மாவு                  : 200 கிராம்
பச்சரிசி மாவு                  : 200 கிராம்
உருளைக்கிழங்கு               : 500 கிராம்
சின்ன வெங்காயம்             : 200 கிராம்
பச்சை மிளகாய்               :  5
காயம்                        :  1/2 ஸ்பூன்
எண்ணை, கறிவேப்பிலை உப்பு :: தேவையான அளவு
  
செய்முறை:

உருளைக்கிழங்கை நன்றாக அவித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் பொடியாக வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், காயம், தேவையான உப்பு போட்டு நன்றாகப் பிசையவும். பிறகு அதை நெல்லி அளவு சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

கடலை மாவு, பக்சரிசி மாவு இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பக்குவத்தில் தயார் பண்ணவும். அந்த உருண்டைகளை இந்த மாவில் முக்கி எடுத்து வாணலியில் உள்ள எண்ணயில் போட்டு பொன்னிறமாக நன்கு வெந்தவுடன் எடுக்கவும்

சுவையுடன் கூடிய போண்டா தயார்.
            

துணை: தேங்காய் சட்னி

No comments:

Post a Comment