Sunday, 19 February 2017

தேங்காய் பர்பி

              தேங்காய் பர்பி

தேவையானவை:

தேங்காய் துருவல்       : 2 கப்
பொரிகடலை மாவு      ; 1/2/ கப்
சர்க்கரை              : 2 1/2 கப்
ஏலம்                 : 1/2 ஸ்பூன்
முந்த்ரிப்பருப்பு          : 20
நெய்                  :4 ஸ்பூன்

செய்முறை;

சுத்தமான பொரிகடலையை எடுத்து மிக்சியில் மாவு செய்யவும்.

தேங்காய்த் துருவலுடன் 25 மில்லி தண்ணீர் விட்டு 20 செகண்ட்ஸ்
மிக்சியில் அரைக்கவும்.

வாணலியில் 4 ஸ்பூன் நெய் விட்டு அதில் முந்த்ரிப்பருப்பு, ஏலம்
வறுத்து, அதில் தேங்காய் துருவலைப் போட்டு 5 நிமிடங்கள்
கிண்டவும். பிறகு பொரிகடலை மாவையும், சர்க்கரையையும்
போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து பக்குவமாக கட்டி சேரும்
வரை கிண்டவும்.

கட்டி சேர்ந்தவுடன் சிறிது நெய் தடவிய அகண்ட தட்டில் விடவும்;
கத்தி வைத்து சிறிய துண்டுகளாக வெட்டலாம்.

எல்லோரும் விரும்பும் சுவையான தேங்காய் பர்பி தயார்.
           :   


No comments:

Post a Comment