Saturday, 18 February 2017

ரவா லட்டு

               ரவா லட்டு

தேவையானவை:

ரவை         : 500 கிராம்
சர்க்கரை      : 500 கிராம்
முந்த்ரிப்பருப்பு :100 கிராம்
ஏலம்         : 2 ஸ்பூன்
நெய்          :400 கிராம்

செய்முறை;

சுத்தமான ரவையை 4 ஸ்பூன் நெய் வாணலியில் விட்டு
வறுக்கவும். சர்க்கரையை மிக்சியில் போட்டு நைசாக
திரித்து வைக்கவும்.

முந்த்ரிப்பருப்பு, ஏலம் இரண்டையும் 2 ஸ்பூன் நெய்யில்
பொன்னிறமாக வறுத்து ரவை, சர்க்கரை மாவில் போட்டு
கலக்கவும்

வாணலியில் நெய் விட்டு கேஸ் அடுப்பை சிம்மில் வைத்து
கைக்கு இதமான சூட்டில் சிறிது சிறிதாக ஸ்பூன் மூலம் நெய்யை
மாவில் விட்டு லட்டு பிடிக்கவும்.

எல்லோரும் விரும்பும் சுவையான சத்துள்ள ரவா லட்டு தயார். 


No comments:

Post a Comment