Monday, 20 February 2017

வாழைப்பூ வடை:கீரை வடை

               வாழைப்பூ வடை:கீரை வடை

தேவையானவை:

கடலைப்பருப்பு                 : 200 கிராம்
வர மிளகாய்                   : 10
வாழைப்பூ                     :  1
காயம், கறிவேப்பிலை, உப்பு       :தேவைக்கு


செய்முறை:

வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து, மிகவும் பொடியாக நறுக்கி தண்ணீரில் கழுவி வைக்கவும். கடலைப் பருப்பை 1/2/ மணி நேரம் ஊற தண்ணீர் எல்லாம் வடிகட்டி மிக்சியில் மிளகாய், காயம், உப்பு போட்டு உதிரியாக அரைக்கவும். அதில் நறுக்கிய கறிவேப்பிலை, வாழைப்பூவை சேர்த்து பிசையவும்.

வாணலியில் உள்ள எண்ணையில் வடை மாவை சிறிய வடைகளாகத் தட்டி  போட்டு, சுவையான வடைகளை பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

வாழைப்பூவுக்குப் பதிலாக கீரையைப் பயன் படுத்தி கீரை வடையும் சுடலாம்.


துணை: தேங்காய் சட்னி



No comments:

Post a Comment