Saturday, 18 February 2017

மனோகரம்

            மனோகரம்

தேவையானவை:

கடலை மாவு         : 500 கிராம்
பச்சரிசி மாவு        :  250 கிராம்
வெல்லம்            :  1 கிலோ
ஏலம்                :  1 ஸ்பூன்
நெய்                 : 4 ஸ்பூன்


செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு
பக்குவமாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் வெல்லம் பொடி செய்து போட்டு, சிறிது தண்ணீர்
விட்டு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். ஏலம் பொடி அதில்
போடவும்.

காரச் சேவு தயார் பண்ணும் சல்லடைக் கரண்டியில், வாணலியில்
உள்ள எண்ணை காய்ந்ததும் மாவைத் தேய்த்து சேவு பண்ணி
சூட்டுடன் வெல்லப்பாகில் போட்டு எடுத்து தனியாக வைக்கவும்.

சுவையான மனோகரம் தயார்.







No comments:

Post a Comment