காரா வடை
தேவையானவை:
கடலைப்பருப்பு : 100 கிராம்
பட்டாணிப்பருப்பு : 100 கிராம்
உழுந்தப் பருப்பு : 100 கிராம்
சின்ன வெங்காயம் :
200 கிராம்
காயம் : 1/2/ ஸ்பூன்
கறிவேப்பிலை : சிறிது
பச்சை மிளகாய் :
5
வரமிளகாய் : 10
உப்பு : தேவையான அளவு
செய்முறை:
கடலைபருப்பு, பட்டாணிப்பருப்பு,
உழுந்தப்பருப்பு, மூன்றையும்
2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதில் தண்ணீரை வடிகட்டிய
பின், வரமிளகாய், காயம்,
உப்பு சேர்த்து கிரைண்டெரில் இட்டு
அரைக்கவும்.
அந்த மாவில் பொடியாக வெட்டிய
வெங்காயம், பச்சை மிளகாய்
கறிவேப்பிலை சேர்த்து,
எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி
வாணலியில் உள்ள எண்ணையில்
போட்டு பொன்னிறத்தில் சுட்டு
எடுக்கவும்.
சுவையான காரா வடை தயார்.
துணை: தேங்காய் சட்னி
No comments:
Post a Comment