Monday, 20 February 2017

உளுந்து வடை

                ளுந்து வடை
;
தேவையானவை

உளுந்தம் பருப்பு         : 200 கிராம்
சின்ன வெங்காயம்       : 150 கிராம்
பச்சை மிளகாய்         : 5
காயம்                  : 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு     : தேவையான அளவு


செய்முறை:

உளுந்தம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் உளுந்து அளவு
மட்டும் இருக்க வேண்டும். பிறகு மிக்சியில் நன்றாக அரைக்க வேண்டும்.
(வேறு தண்ணீர் விட வேண்டாம்). அரைத்த பின் தண்ணீர் அதிகம் என்றால்
சிறிது பச்சரிசி மாவு சேர்க்கலாம்.)

வெங்காயம் மிளகாய், கறி வேப்பிலை சிறிதாக வெட்டி, காயம், தேவையான
உப்பு கலந்து நன்றாகப் பிசையவும்.

வாணலியில் போதுமான அளவு எண்ணை வைத்து, வடை மாவை உள்ளங்கையில்
தட்டி, நடுவில் விரலால் துவாரம் செய்து எண்ணையில் பொன்னிறமாக நன்கு வெந்து
எடுக்கவும்:


துணை: தேங்காய் சட்னி.

No comments:

Post a Comment