Saturday, 18 February 2017

பொரிகடலை லட்டு

               பொரிகடலை லட்டு:


தேவையானவை
பொரிகடலை       :500 கிராம்
சர்க்கரை          : 500  கிராம்
ஏலம்             : 2 ஸ்பூன்
முந்த்ரிப்பருப்பு    : 100 கிராம்
நெய்             :400 கிராம்
                

செய்முறை;

சுத்தமான பொரிகடலையை மிக்சியில் போட்டு நைசாக
திரிக்கவும். சர்க்கரையை மிக்சியில் போட்டு நைசாக
திரித்து வைக்கவும்.

முந்த்ரிப்பருப்பு, ஏலம் இரண்டையும் 2 ஸ்பூன் நெய்யில்
பொன்னிறமாக வறுத்து பொரிகடலை,
சர்க்கரை மாவில் போட்டு கலக்கவும்.

வாணலியில் நெய் விட்டு கேஸ் அடுப்பை சிம்மில் வைத்து
கைக்கு இதமான சூட்டில் சிறிது சிறிதாக ஸ்பூன் மூலம் நெய்யை
மாவில் விட்டு லட்டு பிடிக்கவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான சத்துள்ள லட்டு தயார்

  

No comments:

Post a Comment