நேத்திரங்காய்
சிப்ஸ்
தேவையானவை:
நேத்திரங்காய் : 5
உப்பு, எண்ணை : தேவையான அளவு
செய்முறை:
நேத்திரங்காய் தோலை உறித்து
எடுத்து, தண்ணீரில் 5 நிமிடங்கள்
ஊற வைக்கவும்.
உப்பை சிறிது தண்ணீரில்
கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணை காய்ந்ததும்,
நேத்திரங்காயை சிப்ஸ் அளவில்
சீவி எண்ணையில் போடவும்.
பாதி வெந்தவுடன் 2 ஸ்பூன் உப்புக்
கரைசலை வாணலியில் விடவும்.
சல சல என்று சத்தம் வந்தவுடன்
சிப்ஸை கண் கரண்டி மூலம்
வெளியே எடுக்கவும்.
சுவையான சிப்ஸ் ரெடி. மலையாளிகள்
உப்பேரி என்று சொல்லுவார்கள்.
குறிப்பு: எல்லோரும் எந்த
நேரத்திலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்நாக்ஸ்.
No comments:
Post a Comment