பருப்பு வடை ( ஆம வடை)
தேவையானவை:
கடலைபருப்பு : 250 கிராம்
பட்டாணிப்பருப்பு : 100 கிராம்
சின்ன வெங்காயம் : 200 கிராம்
வரமிளகாய் : 10
காயம், :
1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை : சிறிது
பச்சை மிளகாய் : 5
தேவையான எண்ணை:
செய்முறை
கடலைப்பருப்பு, பட்டாணிப்பருப்பு இரண்டையும்
தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து மிளகாய், காயம் சேர்த்து மிக்சியில் சிறிது பரபர என்று
அரைத்து எடுக்கவும். அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை - இவற்றை பொடிப்பொடியாக வெட்டி எடுத்து, அரைத்த மாவோடு சேர்த்து
பிசையவும்.
பிறகு ஒரு இலை மீதோ அல்லது உள்ளங் கையிலோ
சிறிய அளவு வடைகளாகத் தட்டி வாணாலியில் உள்ள எண்ணையில் போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
சுவையான பருப்பு வடை தயார்.
துணை: தேங்காய் சட்னி
No comments:
Post a Comment