Sunday, 26 February 2017

தக்காளி சாதம்

              தக்காளி சாதம்

தேவையானவை:

பச்சரிசி                    ;200 கிராம்
தக்காளி                   :250 கிராம்
பல்லாரி வெங்காயம்       : 1
இஞ்சி, பூண்டு             : 1 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய்            : 5
மஞ்சள் பொடி             : 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்             : 1/2 ஸ்பூன்
கறி வேப்பிலை,கொத்து மல்லி: சிறிதளவு
எண்ணை, உப்பு           : தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை குக்கரில் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சிறிய துண்டுகளாக
வெட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணையில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு
தாளித்து அதில் தக்காளி, வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்.
அதில், இஞ்சி, பூண்டு, மஞ்ச்ள் தூள், மிளகாய் தூள், உப்பு போடவும்.
கறிவேப்பிலை, கொத்து மல்லி இலை போடவும்.
இப்போது வாணலியில் சிறிது நேரம் ஆற வைத்த சாதத்தைப்
போட்டு நன்றாகக் கிளறவும்.

சுவையான தக்காளி சாதம் தயார்.

துணை: அப்பளம், வத்தல், உருளைக் கிழங்கு பொரியல்.  




No comments:

Post a Comment