Monday, 20 February 2017

பொரிகடலை தட்டை

                   பொரிகடலை தட்டை
தேவையானவை:

அரிசி மாவு           ;ஒரு கப்
பாதாம் பருப்பு         20
பொரிகடலை மாவு    கால் கப்
கடலைப் பருப்பு       ஒரு ஸ்பூன்
கருப்பு எள்             இரண்டு ஸ்பூன்
பெருங்காயத்தூள்       ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள்          ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய்        தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை ஊற வைக்கவும்.பாதாம் பருப்பை வென்னீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து, தோலுறித்து, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு, அரைத்த விழுது, பொரிகடலை மாவு, மிளகாய்த்தூள், காயத்தூள்,ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர்
விட்டுக் கட்டியாகப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்த்தும், பிசைந்து வைத்திருக்கும்
மாவிலிருந்து சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து வட்ட வட்டமாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும். 


சுவையான பொரிகடலைத் தட்டை தயார்.

No comments:

Post a Comment