புளியோதிரை
தேவையானவை:
பச்சரிசி : 200 கிராம்
புளி : 25 கிராம்
வர மிளகாய் :10
காயம், : 1/2 ஸ்பூன்
வெந்தயம், விதைமல்லி, ; 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு, :
1/2 ஸ்பூன்
கடலைப் பருப்பு, கடுகு : சிறிதளவு
எண்ணை, உப்பு :
தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை குக்கரில் நன்றாக
வேக வைத்து எடுக்கவும். புளியைக்
கரைத்துப் பின் வடிகட்டி
வைக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு
அதில் வர மிளகாய், விதை மல்லி,
வெந்தயம், உளுந்தம் பருப்பு
போட்டு வறுத்து வைக்கவும். பிறகு
வாணலியில் எண்ணையில் கடுகு,
உளுந்தம் பருப்பு போட்டு
தாளித்து, அதில் வறுத்து
வைத்ததைப் போடவும்.
இப்போது வாணலியில் சிறிது
நேரம் ஆற வைத்த சாதத்தைப்
போட்டு 5 ஸ்பூன் நல்ல எண்ணை
விட்டு நன்றாகக் கிளறவும்.
சுவையான புளியோதிரை தயார்.
துணை: அப்பளம், வத்தல்,
சிப்ஸ், பொரிகடலை துவையல்,
வழைக்காய் பொரியல்
No comments:
Post a Comment