பாசிப்பருப்பு லட்டு
தேவையானவை:
பாசிப்பருப்பு (உடைத்தது) : 500 கிராம்
சர்க்கரை : 750 கிராம்
முந்த்ரிப்பருப்பு :100 கிராம்
ஏலம் : 2 ஸ்பூன்
நெய் : 400 கிராம்
செய்முறை:
பாசிப்பருப்பை மாவு மில்லில்
நன்றாக திரித்து வைக்கவும்.
சர்க்கரையை மிக்சியில்
திரித்து எடுக்கவும். உடைத்த
முந்த்ரிப் பருப்பை, ஏலத்தை
நெய்யில் வறுத்து திரித்து வைத்த
பாசிப்பருப்பு, சர்க்கரை
உடன் கலந்து விடவும்.
நெய்யை அடுப்பில் சிம்
நிலையில் வைத்து, நெய்யை சிறிது
சிறிதாக மாவில் விட்டு,
சிறிய லட்டுகளாகப் பிடித்து வைக்கவும்.
குழந்தைகள் விரும்பும்
சுவையான சத்து மிகுந்த லட்டு தயார்.
No comments:
Post a Comment