Sunday, 19 February 2017

உக்காரை:

                                        உக்காரை:

தேவையானவை:

கடலைப்பருப்பு                :250 கிராம்
சிறு பருப்பு                         :250 கிராம்
பச்சரிசி மாவு                   : 50 கிராம்
வெல்லம்                         : 1 கிலோ
ஏலம்                                  : 2 ஸ்பூன்
முந்த்ரிப்பருப்பு              : 50 கிராம்
நெய்                                    :250 கிராம்

செய்முறை:

கடலைப்பருப்பு, சிறு பருப்பு இரண்டையும் தனித் தனியாக வாணலியில்
வறுத்து, சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஊறவைத்த  கடலைப்பருப்பு, சிறுபருப்பு இரண்டையும் தனித்தனியாக
மிக்சியில் அரைத்து, அதில் அரிசி மாவைக் கலந்து விடவும்.
வாணலியில் 100 கிராம் நெய் விட்டு கலந்து வைத்ததை போட்டு நன்றாகக்
கிண்டவும்.

முந்த்ரிப்பருப்பை சிறிய துண்டுகள், ஏலப் பொடி இரண்டையும் தனியாக நெய்யில் வறுத்துப் போடவும். மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் விட்டு உப்புமா போல உதிர உதிர வருமாறு கிண்டவும்.

சுவையான உக்காரை தயார்.

No comments:

Post a Comment