பட்டாணி புலாவ்
தேவையானவை:
பாசுமதி அரிசி : 200 கிராம்
பட்டாணி (காய்கறி) ; 150 கிராம்
கேரட் : 50 கிராம்
பல்லாரி வெங்காயம் : 2
இஞ்சி, பூண்டு : சிறிதளவு
பச்சை மிளகாய் : 4
ஏலம், : 1 ஸ்பூன்
கிராம்பு : 1/2 ஸ்பூன்
பட்டை : சிறிது
நெய் ,வெண்ணை : சிறிது அளவு
உப்பு : தேவைக்கு
செய்முறை:
வாணலியில் நெய், வெண்ணை 2 ஸ்பூன் விட்டு, ஏலம், கிராம்பு, பட்டை
போட்டு வறுத்து, அதில் பல்லாரி வெங்காயம் சிலைஸுகளாக வெட்டிப்
போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் ஊற வைத்த பட்டாணி,
கேரட்டைப் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிப் போடவும்.
போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் ஊற வைத்த பட்டாணி,
கேரட்டைப் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிப் போடவும்.
தேங்காய்ப் பாலில் ஊற வைத்த பாசுமதி அரிசியை குக்கரில் ஒன்றரை மடங்கு
தண்ணீர் விட்டு வெந்ததும், அதை வாணலியில் போட்டு, உப்பும் இட்டு, நன்றாக
கிளறவும். தேங்காய்ப் பாலில் பாசுமதி அரிசி ஊறியிருப்பதால் சாதம் நிறம்
வெண்ணிறமாக இருக்கும்.
சுவையான பட்டாணி புலாவ் ரெடி.
துணை: துவரம் பருப்பு தால் - செய்முறை:
துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு தேவையான தண்ணீருடன்
குக்கரில் வைக்கவும்.
வாணலியில் உள்ள எண்ணையில் 1/2 ஸ்பூன் சீரகம் போட்டு, சீரகம்
பொரிந்தவுடன் பல்லாரி, தக்காளி, ப.மிளகாய் சிறிதாக நறுக்கி போட்டு
வதக்கவும். வேக வைத்த துவரம் பருப்பை வாணலியில் இடவும்..
தால் ரெடி.