Monday, 20 February 2017

முப்பருப்பு வடை


                         முப்பருப்பு வடை
தேவையானவை:

உளுந்து          : 1 கப்
கடலைப் பருப்பு   : ½ கப்
துவரம் பருப்பு     : ½ கப்
பச்சரிசி           : 6 ஸ்பூன்
மிளகுத்தூள்       : 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் : ½ ஸ்பூன்
தேங்காய்த் துருவல்: ¼ கப்
கறிவேப்பிலை,      : 20 இலைகள்
மல்லித் தழை       : சிறிதளவு
காய்ந்த மிளகாய்     : 2
உப்பு, எண்ணெய்     : தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பு வகைகளுடன் காய்ந்த மிளகாயையும் சேர்த்து அளவான நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் உப்பு, தேங்காய்த்துருவல்
சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித் தழை சேர்த்து பிசைந்து சூடான எண்ணெயில் வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்
சுவையான முப்பருப்பு வடை தயார்.

       

No comments:

Post a Comment