Saturday, 18 February 2017

சோமாசி

                     சோமாசி

தேவையானவை:

மைதா மாவு                 : 500 கிராம்
பொரி கடலை                : 300 கிராம்
சர்க்கரை                     : 300 கிராம்
முந்த்ரிப்பருப்பு                : 100 கிராம்

செய்முறை:

மைதாமாவில் 100 மில்லி தண்ணீர்+ 100 மில்லி எண்ணை கலந்து அதை விட்டு மாவை நன்றாக சப்பாத்தி மாவு போல பிசையவும்.

பொரிகடலை, சர்க்கரை தனித் தனியாக மிக்சியில் போட்டு திரித்து, அதில் ஏலம் சேர்க்கவும். திரித்த பொரிகடலையை நன்றாக சலித்து அதில் திரித்த சர்க்கரை, ஏலப்பொடி கலக்கவும்.

வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு, முந்த்ரிப்பருப்பை மிக சிறிய துண்டுங்களாகப் போட்டு பொன்னிறத்தில் வறுத்து பொரிகடலைப் பவுடரில் சேர்க்கவும்.( சோமாசிப் பொடி)

மைதா மாவை பூரி போல போட்டு அதன் நடுவில், சோமாசிப் பொடியை வைத்து பாதியாக மூடி மைதா கலவையை(2 ஸ்பூன் மைதா மாவை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கலந்து வைக்கவும்)
ஒரத்தில் தடவி, சோமாசி கரண்டியை வைத்து ஒரத்தை மெதுவாக அமுக்கவும்.இதனால் சோமாசி சுடும் போது உடையாமல் வரும்.

வாணலியில் தேவையான எண்ணை வைத்து, சோமாசியை பக்குவமாக சுட்டு எடுக்கவும்.


சுவை மிகுந்த சோமாசி தயார்.   

No comments:

Post a Comment