Monday, 20 February 2017

கம்பு வடை

                           கம்பு வடை

தேவையானவை:

கம்பு                   : 2 கப்
காய்ந்தமிளகாய்        : 5
கடலைப்பருப்பு,         : ¼ கப்
துவரம் பருப்பு,          : ¼ கப்
உளுந்தம் பருப்பு        : ¼ கப்
பெருங்காயம்           : 1 ஸ்பூன்
கறிவேப்பிலை,மல்லி தழை  : சிறிதளவு
தேங்காய் துருவல்          : 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய்            : தேவையான அளவு

செய்முறை:

கம்பு தனியத்தை 6 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு வகைகளை தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். முதலில் கம்பு தானியத்தை அரைத்து, அது பாதி மசிந்து வந்ததும், பருப்பு வகைகள், உப்பு, மிளகாய்,
பெருங்காயம், தேங்காய்த்துருவல் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.. அரைத்த மாவுடன் கறிவேப்பிலை, மல்லி தழை சேர்த்து
வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான கம்பு வடை தயார்.


No comments:

Post a Comment