மாவிளக்கு
தேவையானவை:
பச்சரிசி : 1 கப்
வெல்லம் : ¾ கப்
ஏலக்காய் : 2
நெய் : 3 டீஸ்பூன்
செய்முறை:
அரிசியை
சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற விட்டு, பிறகு தண்ணீரை
வடித்து, வெள்ளைத்துணியில் பரப்பி, அரை மணி நேரம் நிழலில் ஆற
விடவும். பிறகு அரிசியை நன்றாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.
சலித்த
மாவுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள் கலந்து தேவையென்றால், சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும்.
இந்த மாவை விளக்கு போலச் செய்து நடுவில் குழி அமைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம்
No comments:
Post a Comment