தேன்குழல்
தேவையானவை:
புழுங்கல் அரிசி : 400 கிராம்
பச்சரிசி மாவு : 200 கிராம்
உழுந்த மாவு 100 கிராம்
எள் : 2 ஸ்பூன்
காயம் : 1 ஸ்பூன்
எண்ணை : தேவையான அளவு
செய்முறை:
புழுங்கல் அரிசி 2 மணி
நேரம் ஊற வைத்து, கிரைண்டெரில்
நன்றாக அரைக்க வேண்டும்.
உழுந்தப்பருப்பை எண்ணை
விடாமல் வாணலியில் இளம்
வறுப்பாக வறுத்து, மாவு
மில்லில் கொடுத்து திரித்து வைக்கவும்.
இரண்டு அரிசி மாவு, உழுந்த
மாவு, காயம் எள் - சிறிது எண்ணை
சேர்த்து, தேவையான தண்ணீர்
விட்டு பக்குவமாக பிசையவும்.
தேங்குழல் உழக்கில் மாவை
வைத்து வாணலியில் உள்ள எண்ணையில்
அளவாகப் பிழிந்து , பொன்னிறத்தில்
சுட்டு எடுக்கவும்.
எல்லோரும் விரும்பும் சுவையான
தேங்குழல் தயார்.
No comments:
Post a Comment