தேவையானவை:
சேப்பங்கிழங்கு 250 கிராம்
வரமிளகாய் தூள்,
உப்பு சிறிது அளவு
செய்முறை:
சேப்பங்கிழங்கை நன்றாக
கழுவிய பின் , முக்கால் பதம் தண்ணீர் விட்டு
வேக வைத்து, தோலை உறித்து
எடுத்து, கிழங்கை சிப்ஸ் போல் சிறிய
அளவில், நறுக்கி வைக்கவும்.
வாணலியில் சமையல் எண்ணை
வைத்து, எண்ணை காய்ந்தவுடன்,
நறுக்கிய சிப்சை பொன்னிறத்தில்
பொரித்து எடுத்து, அதில் உப்பையும்,
மிளகாய் தூளையும் தேவையான
அளவு கலந்து வைக்கவும்.
சேப்பங் கிழங்கு பிடிக்காதவர்களும்,
விரும்பி சாப்பிடுவார்கள் என்பது
உறுதி
No comments:
Post a Comment