முந்திரிக்கொத்து
தேவையானவை
பாசிப்பருப்பு : 500 கிராம்
தேங்காய் : ஒன்று
எள் : 50 கிராம்
ஏலம் : 2 ஸ்பூன்
வெல்லம் : 1 கிலோ
மைதா மாவு : 250 கிராம்
பச்சரிசி : 100 கிராம்
சமையல் எண்ணை: தேவைக்கு
செய்முறை:
பாசிப்பருப்பை வாணலியில் பக்குவமாக வறுத்து,மாவு மில்லில்
திரித்து வைக்கவும். எள்ளு , தேங்காய் துருவியது, ஏலம் இரண்டு
ஸ்பூன் நெய் விட்டு வறுத்து அதை பாசிப்பருப்பில் கலந்து வைக்கவும்.
வாணலியில் சிறிது அள்வு தண்ணீர் விட்டு, வெல்லத்தை பொடி செய்து
பொட்டு கம்பிப்பாகு பதம் வரை காய்ச்சவும்.
வெல்லப்பாகை கலந்து வைத்த பருப்பில் சிறிது சிறிதாக விட்டு, நெல்லி
அளவில் உருண்டை பிடித்து வைக்கவும்.
மைதா மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு
பக்குவத்தில் பிசைந்து வைக்கவும்.
பருப்பு உருண்டைகளை மூன்று மூன்றாக எடுத்து, கரைத்து வைத்த மைதா
மாவில் முக்கி எடுத்து , வாணலியில் உள்ள எண்ணையில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும்.
மிகவும் ருசியான முந்திரிக்கொத்து தயார்.
No comments:
Post a Comment