ஒமப்பொடி
தேவையானவை:
கடலை மாவு :500 கிராம்
பச்சரிசி மாவு :500 கிராம்
வர மிளகாய்த் தூள் :7 ஸ்பூன்
காயம் : 2 ஸ்பூன்
ஒமம் : 2 ஸ்பூன்
எண்ணை, உப்பு : தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவு, பச்சரிசி மாவு,
மிளகாய்த் தூள், காயம், ஒமம், தேவையான அளவு
உப்பு சேர்த்து, சிறித்
எண்ணை விட்டு, அளவான தண்ணீர் விட்டு நன்றாகப் பிசையவும்.
தேங்குழல் உழக்கில் ஒமப்பொடி
சில் போட்டு, அதில் மாவு இட்டு வாணலியில் உள்ள
எண்ணையில் பிழிந்து பொன்னிறத்தில்
சுட்டு எடுக்கவும்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்
சுவை ஒமப்பொடி ரெடி.
No comments:
Post a Comment