பாதுஷா
தேவையானவை:
மைதா மாவு : 1 கப்
சர்க்கரை : 1 கப்
தயிர் : 1 ஸ்பூன்
சோடா உப்பு : 1 சிட்டிகை
நெய் : 4 ஸ்பூன்
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தில்
மைதா மாவு, சோடா உப்பு இரண்டையும்
கலந்து, அதில் தயிர் விடவும்;
நன்றாக கலக்கவும்; பிறகு நெய் விட்டு
நன்றாகப் பிசைந்து வைத்துக்
கொள்ளவும்.
வாணலியில் சர்க்கரைப் போட்டு
அதில் சர்க்கரை மூழ்குமளவு தண்ணீர்
விட்டு கம்பிப் பாகு பதம்
வரும் வரைக் காய்ச்சவும்.
மைதா மாவை வடை மாதிரி ஒரு
நெய் தடவிய இலையில் தட்டி, நடுவில்
பெருவிரல் கொண்டு சிறிய
குழி பண்ணி வாணலியில் உள்ள சர்க்கரைப்
பாகில் போட்டு ஊற வைத்து
அரை மணி கழித்து எடுக்கவும்.
சுவையான பாதுஷா ரெடி.
No comments:
Post a Comment