உடனடி வடை
தேவையானவை:
மைதா :2 கப்
ரவை :1/2 கப்
அரிசி மாவு ½ கப்
வெண்ணெய் : 1 டீஸ்பூன்
எள் :1/2 டீஸ்பூன்
பெருங்காயம் : ¼ டீஸ்பூன்
காரப் பொடி : ½ டீஸ்பூன்
உப்பு எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை:
மைதா, ரவை, அரிசி
மாவு இவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.வெண்ணெயை உருக்கி இந்த மாவில் விட்டு, எள்,
பெருங்காயம்
காரப் பொடி தேவையான
அளவு உப்பு சேர்த்து சிறிதளவு த்ண்ணீர் தெளித்துக்
கெட்டியாகப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிசைந்து வைத்திருக்கும் மாவை கையில் லேசாக
எண்ணெய் தடவிக் கொண்டு சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான வடை உடனே
தயார்.
No comments:
Post a Comment