Monday, 20 February 2017

சீடை

                சீடை

தேவையானவை:

புழுங்கல் அரிசி        : 400 கிராம்
உழுந்த மாவு          : 100 கிராம்
தேங்காய்             : 1
வெள்ளை எள்         : 25 கிராம்
காயம்                : 1 ஸ்பூன்
வெண்ணை           : 50 கிராம்
எண்ணை, உப்பு        : தேவையான அளவு

செய்முறை

அரிசி 2 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டெரில் நல்ல மையாக
அரைத்து ஒரு வெள்ளைத் துணியில் 15 நிமிடங்கள் வைக்கவும்.
அதிகப்படியான தண்ணீர் வெளியெறிவிடும்.

அரிசி மாவில் உழுந்த மாவு, காயம், உப்பு, எள் சேர்த்து, வென்னீர் விட்டு
வெண்ணை போட்டு நன்றாகப் பிசையவும். அதன்பின் சிறிய உருண்டைகளாக
(கட்டி உருண்டையாக இருக்கக் கூடாது) உருட்டவும்

வாணலியில் உள்ள எண்ணையில் மாவு உருண்டைகளைப் போட்டு, பொன்னிறமாக
சுட்டு எடுக்கவும்.
 

சுவையான சீடை தயார்.

No comments:

Post a Comment