கும்பகோணம் டிகிரி
காப்பி
தேவையான பொருட்கள்
பக்குவமாக வறுத்து
அரைத்த
புதிய காப்பி பவுடர்
(சிக்கிரி கலந்தது) – 3 மேசைக் கரண்டி
பால் - 1/1/2 கப்
சர்க்கரை - 11/2 தேக்கரண்டி
தண்ணீர் - ½ கப்
செய்முறை:
தண்ணீரை குமிழிகள்
வரும் வரை கொதிக்க விடவும். மூன்று மேசைக் கரண்டி காப்பி பவுடரை பில்டரில் போட்டு மெதுவாக
அழுத்தவும். உடனடியாக வெந்நீரை அதில் ஊற்றி மூடவும். அரை மணி நேரத்திற்குப் பிறகு ஸ்ட்ராங்கான
டிகாஷன் தயார்.
1/1/2 கப் பாலை
தண்ணீர் சேர்க்காமல் கொதிக்க வைக்கவும். ½ கப் டிகாஷனை பித்தளை அல்லது சில்வர் தம்ளரில்
விடவும். அதில் ¾ கப் பாலும் அளவுக்கு ஏற்ப சர்க்கரையும் சேர்த்து தம்ளரில் நுரை பொங்க
ஊற்றி வைக்கவும். நறுமணத்துடன் டிகிரி காப்பி தயார்.
No comments:
Post a Comment