இரண்டு நிமிட அல்வா
தேவையானவை:
கோதுமை மாவு : ஒரு
கப்
சர்க்கரை
: ஒரு கப்
நெய்
: ½ கப்
தண்ணீர்
:1 ½ கப்
முந்திரிப்பருப்பு : 10
ஏலக்காய் பொடி : ¼ டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில்
சர்க்கரை, ஏலப்பொடி பொட்டு கொதிக்க விடவும்.
இன்னொரு அடுப்பில் ஒரு வாணலியில் முக்கால்
பங்கு
நெய், முந்திரி, கோதுமை மாவு போட்டு சிவக்க
வறுக்கவும். இது வறுபடுவதற்கும், தண்ணீர்
சர்க்கரை கலந்தது கொதிப்பதற்கும் சரியாக இருக்கும்.
கொதித்த சர்ககரைத் தண்ணீரை வறுத்த
மாவில் கொட்டவும்.
மீதி கால் பங்கு நெய்யை கொட்டி கலந்து இறக்கி வைக்கவும்
2 நிமிடங்களில்
சுவையான அல்வா தயார்.
No comments:
Post a Comment