மோதகம்
தேவையானவை:
பச்சரிசி : 1 கப்
பாசிப் பருப்பு : ¼ கப்
வெல்லம் : ¾ கப்
நெய் 1 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் :1 ஸ்பூன்
ஏலக்காய் பொடி : ½ ஸ்பூன்
செய்முறை:
அரிசி, பருப்பைத்
தனித்தனியாக வறுத்து, ரவை போல உடைத்துக்
கொள்ளவும். வெல்லத்தை
சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டி,
கொதிக்க விடவும்.
அரைத்த கலவையைப் போட்டு கிளறவும். தேங்காய்த்
துருவல், ஏலக்காய்ப்
பொடி சேர்த்துக் கெட்டியாகக் கிளறி, இறக்கவும்.
கலவையில் சிறிது
எடுத்து கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு மோதக வடிவில் பிடித்து ஆவியில் வேக வைத்து
எடுக்கவும்.
சுவையான மோதகம்
தயார்.
No comments:
Post a Comment